
ரஜினிக்கு நிகரானவர் விஜய் இல்லை என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விருதுநகரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “ இது அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் அல்ல. அடுத்த ஐந்து ஆண்டு ஆட்சிக்கான முதல் பட்ஜெட்.
தமிழக அரசின் பட்ஜெட் வரி இல்லாத யாரையும் பாதிக்காத முத்தான பட்ஜெட். விஜய்யிடம் நடத்திய வருமான வரித்துறை சோதனையில் எந்த அரசியல் தலையீடும் இல்லை. ரஜினிக்கு நிகரானவர் விஜய் இல்லை. ரஜினிக்கு நிகர் அஜித்தான். ரஜினி மலை; அஜித் தலை” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் விஜய் வீட்டில் நடந்த வருமான வரித்துறையினரின் சோதனையில் அரசியல் தலையீடு இருந்ததாக பலரும் கூறினர். இந்நிலையில் விஜய்யிடம் நடந்த வருமான வரித்துறை சோதனையில் எந்த அரசியல் தலையீடும் இல்லை என அமைச்சர் கூறியுள்ளார்.