[X] Close

ஆப்கானில் குண்டு வெடிப்பு: 10 பேர் பலி

Bomb-blast-in-Afghanistan

 

ஆப்கானிஸ்தானில் உள்ள ஜமா மசூதி அருகே நடைபெற்ற மோட்டார் சைக்கிள் வெடிகுண்டு விபத்தில் 10 பேர் பலியாகினர். 

ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹிராட் மாகாணத்தில் ஜமா பழமை வாய்ந்த மசூதி ஒன்று உள்ளது. இந்த மசூதியின் அருகே நேற்று திடீரென மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. 


Advertisement

கடந்த சில தினங்களுக்கு முன்பு காபூல் நகரில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close