லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் ‘ஒருகுட்டிகதை’ பாடல் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் மாஸ்டர். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நெய்வேலி என்.எல்.சி பகுதியில் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது அனைவருக்கும் தெரிந்ததே.
இந்நிலையில், மாஸ்டர் படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகியுள்ளது. ஏற்கனவே படத்தின் சில போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், படத்தின் முதல் பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியானது. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.
தற்போது வெளியாகியுள்ள ‘குட்டிக் கதை’ பாடலை நடிகர் விஜய் பாடியுள்ளார். பாடலை எழுதியிருக்கிறார் அருண்ராஜா காமராஜ். 'Let me sing a kutti story pay attention listen to me' என துவங்கும் இப்பாடல் மாணவர்களுக்கு அறிவுரை கூறும் விதமாக உள்ளது. பாடல் முழுக்க ஆங்கில வார்த்தைகளைக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.
பாடல் வெளியாகியிருக்கும் வீடியோவின் அனிமேஷன் காட்சிகள் மிகவும் அற்புதமாக உருவாக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க விஜயின் குரலில் நேர்மறை சிந்தனைகளைச் சொல்லும் படியாக இப்பாடல் அமைந்திருக்கிறது. life is very short nanba, always be happy போன்ற வரிகள் நிச்சயம் அவரது ரசிகர்களால் இன்று முதலே முணுமுணுக்கப்படும்.
Loading More post
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
கல்வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில் “ரூட் தல”கள் கைது! சொன்னதை செய்தது சென்னை காவல்துறை
‘ஜெய்பீம்’ பட சர்ச்சை - நீதிமன்ற உத்தரவின் படி நடிகர் சூர்யா, இயக்குநர் மீது வழக்குப்பதிவு
ஆதம்பாக்கத்தில் பைக் வீராங்கனையை பின்தொடர்ந்து வந்த இளைஞர் கைது -விசாரணையில் வெளியான தகவல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்