Published : 07,Jun 2017 02:50 AM

எம்எல்ஏ, எம்பிக்கள் தினகரனை சும்மாதான் சந்திக்கிறாங்களாம்!

Mofoi-Pandiarajan-about-MLA--MPs-meeting-with-TTV-Dhinakaran

டிடிவி தினகரனை சந்திக்கும் எம்எல்ஏ, எம்பிக்கள் அவருடைய ஆதரவாளர்கள் அல்லது எதிர்ப்பாளர்கள் என்று கூற முடியாது என ஓபிஎஸ் ஆதரவாளரான மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையை அடுத்த பூவிருந்தவல்லியில் அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியின் செயல்வீரர் கூட்டம் நடந்தது. அதில் பேசிய முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், “ஓபிஎஸ் அவர்களின் அமைதி புரட்சி, அரசியல் புரட்சியாக மாற்றம் அடைந்துள்ளது. டிடிவி தினகரனை சந்திக்கும் எம்எல்ஏ, எம்பிக்கள் அவருடைய ஆதரவாளர்கள் அல்லது எதிர்ப்பாளர்கள் என்று கூறமுடியாது” என்று குறிப்பிட்டார்.

மேலும், பிரிந்து சென்ற ஒரு தாய் மக்கள் ஒன்று சேர வேண்டும். பேச்சுவார்த்தையை தள்ளிப் போடாமல் மிக எளிமையாக செயல்படுத்த முடியும் என்று நம்புவதாகவும், அதனை செயல்படுத்தினால் இணைப்பு நிகழும் என்றும் தெரிவித்தார். நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளாமல் எடப்பாடி அணியுடன் இணைந்தால் மக்கள் எங்களை நம்பமாட்டார்கள். வெளிப்படையான, நியாயமான நிபந்தனைகள் ஓபிஎஸ் அணியில் இருப்பதால்தான் 100க்கு 95 சதவீதம் தொண்டர்கள் ஓபிஎஸ் அணியில் உள்ளதாக குறிப்பிட்டார். தற்போது உள்ள அரசு விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் ஜெயலலிதா மறைவிற்கான நீதி விசாரணை கட்டாயம் நடைபெறும் என்று கூறினார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்