ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் பயிற்சி செய்யும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
2020ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் டி20 தொடர் அடுத்த மாதம் 29ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்தத் தொடருக்காக ஆவலுடன் கிரிக்கெட் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களை பொறுத்தவரையில் கடந்த முறை தவறவிட்ட கோப்பையை இந்த முறை கண்டிப்பாக சிஎஸ்கே வெல்ல வேண்டும் என எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இதே எண்ணத்துடன் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினரும் உள்ளனர் என்பதை நிரூபிக்கும் வகையில், சென்னை அணியின் வீரர்கள் தற்போதே பயிற்சியில் இறங்கிவிட்டனர்.
அவ்வாறு பயிற்சி செய்யும் புகைப்படங்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளன. அதில் ‘சின்னத்தல’ சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு மற்றும் முரளி விஜய் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. மூன்று பேரும் தீவிர பேட்டிங் பயிற்சியில் இருக்கின்றனர் என்பது பார்க்கும்போதே தெரிகிறது.
Loading More post
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் -இந்தியாவை நோக்கி பார்வையை திருப்பும் ஆப்பிள் நிறுவனம்
பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் அளவுக்கு அதிகரிப்பு - ஏஐசிடிஇ
எல்ஐசி சந்தை மதிப்பு நான்கே நாட்களில் ரூ.77,600 கோடி சரிவு
ஹைதராபாத்: சாதி மறுப்பு திருமணம் - இளைஞர் ஆணவப் படுகொலை
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!