[X] Close

மோடி அரசு டிவியில் ஹீரோ நிஜத்தில் ஜீரோ... : குலாம் நபி ஆசாத்

Congress-attack-on-Modi

 


Advertisement

மோடி அரசு டிவியில் ஹீரோவாகவும் நிஜத்தில் ஜீரோவாகவும் இருக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.

டெல்லியில் நடந்த காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் உட்பட நாட்டில் பல்வேறு பிரிவினருக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவதில் மோடி அரசு தோல்வி அடைந்து விட்டது என்றார். வெற்று முழக்கமும் விளம்பரமும் தேடும் ஒரு அரசாகத்தான் இருக்கிறது. தலித்துகள், பழங்குடியினர், சிறுபான்மையினர் மத்தியில் அச்சம் நிலவுகிறது. விவசாயிகளுக்கு அவர்களின் உற்பத்திச் செலவைக்காட்டிலும் 50 சதவீதம் அதிகமாக குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்படும் என வாக்குறுதி கொடுத்தார்கள். அது பொய் வாக்குறுதி என்று இப்போது நிரூபணமாகி விட்டது. ஒவ்வொரு வருடமும் ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்று குலாம் நபி ஆசாத் கூறினார். 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close