Published : 06,Jun 2017 12:57 PM
டிடிவி.தினகரனுக்கு 27 எம்எல்ஏக்கள் ஆதரவு

அதிமுக அம்மா அணி துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு இதுவரை 27 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மதுரை வடக்கு தொகுதி எம்எல்ஏ ராஜன் செல்லப்பாவும், பரமக்குடி எம்எல்ஏ முத்தையாவும் தினகரனை சந்தித்தனர்.
சென்னை பெசன்ட் நகரில் உள்ள தினகரனின் இல்லத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. இதைத் தொடர்ந்து கலசப்பாக்கம் எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களுமான செந்தில் பாலாஜி, மோகன் உள்ளிட்டவர்களும் தினகரனை சந்தித்தனர். விளாத்திகுளம் எம்எல்ஏ உமா மகேஸ்வரி கடைசியாக தினகரனை சந்தித்தார். இவரைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் பலரும் தினகரனைச் சந்தித்து வருகின்றனர்.
டிடிவி தினகரனுக்கும், அமைச்சர்களுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து தினகரனை சந்தித்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 27 எம்எல்ஏக்கள் தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் அதிமுக அம்மா அணியிலேயே இரண்டு அணிகள் உருவாகி இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.