[X] Close

சீனாவில் கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 86 பேர் உயிரிழப்பு

உலகம்

86-people-died-in-a-single-day-due-to-coronavirus-in-China

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாகச் சீனாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 86 பேர் உயிரிழந்தனர். 34,500க்கும் மேலான நபர்களுக்கு இந்நோயின் தாக்கம் ஏற்பட்டுள்ளது.


Advertisement

image

இதுவரை கொரோனா வைரஸ் 27 நாடுகளுக்குப் பரவியுள்ளது. நோயைக் கட்டுப்படுத்த சீனா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் தொடர் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 720ஐ கடந்துள்ளது.


Advertisement

“கொரோனா தாக்கினால் தாக்கட்டும்” - தாய் நாட்டினரை துணிச்சலாக மீட்டெடுத்த இந்திய விமானிகள்

புதிதாக 3,399 பேருக்கு நோய்ப் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 4,214 பேருக்கு நோய்ப் பாதிப்பு இருக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் சீனாவின் உகான் நகரத்தில் உயிரிழந்துள்ளார்.

image


Advertisement

1,280 நோயாளிகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றும், 510 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதாகவும் சீன சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீனாவைத் தவிர்த்து வெளிநாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 220 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக ஜப்பானில் 86 பேரும், சிங்கப்பூரில் 33 பேரும் உயிரிழந்துள்ளனர். 


Advertisement

Advertisement
[X] Close