அதிமுக அம்மா அணி துணை பொதுச்செயலாளர் தினகரன் நீண்ட நாள் கழித்து மீண்டும் டிவிட்டருக்கு வந்துள்ளார்.
திஹார் சிறையில் இருந்ததாலும், அதிமுகவில் பல பிரச்சனைகள் நிலவி வந்ததாலும் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக டிவிட்டரில் ஆக்டிவாக இல்லாமல் இருந்த தினகரன் தற்போது மீண்டும் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், "அனைவருக்கும் வணக்கம், மீண்டும் உங்களை இந்த தளத்தில் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்" என பதிவிட்டுள்ளார். இரண்டாக பிரிந்த அதிமுக அணி, இரட்டை இலை மீட்க லஞ்சம் கொடுத்த வழக்கு என பல பிரச்சனைகளில் சிக்கியிருந்த தினகரன் கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி தனது கடைசி பதிவை வெளியிட்டிருந்தார். அதில் "எனக்கு இதுவரை ஒத்துழைப்பு நல்கிய அத்துணை கழக நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்" என பதிவிட்டிருந்தார். கட்சியிலிருந்து விலகி நிற்பதாக அப்போது அறிவித்திருந்த தினகரன், தற்போது மீண்டும் பழைய உத்வேகத்துடன் டிவிட்டரில் இறங்கியுள்ளது, அவரின் ஆதரவாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Loading More post
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ்.. அதிக முறை கடைசி இடத்தை பிடித்த அணி எது?
செம்மலை, ஜெயக்குமார்.., மாநிலங்களவை அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் தொடரும் இழுபறி!
2 வருடமாக அவதிப்பட்ட மகன்; தியாக ரூபத்தில் வந்த தாய் - ரோபோ உதவியுடன் மருத்துவர்கள் சாதனை
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்