[X] Close

முகங்களில் ரத்த தழும்பு... கொரோனாவை ஒழிக்க பணியாற்றும் மருத்துவ ஊழியர்களின் நிலை..!

உலகம்

corona-virus-doctors-treat-the-patient-with-smile-photos-viral-in-world

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 560 ஆக அதிகரித்துள்ளது. இதில் வுஹான், ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்தை கடந்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.


Advertisement

விஜய் வீட்டில் ஐடி ரெய்டு..! வைரலாகும் அஜித்தின் பழைய கருத்துகள்.

இதனால் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட ஹூபெய் மாகாணத்தில் உள்ள ஜிம் மற்றும் கண்காட்சி அரங்கங்கள் அனைத்து‌ம் தற்காலிக மருத்துவமனைகளாக மாற்றப்பட்டு, நகரில் உள்ள மொத்த மருத்துவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து இரவு பகல் பாராமால் உழைத்து வருகின்றனர்.
இவர்களது தன்னலமற்ற இந்த பணிக்கு உலகமெங்கிலும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.


Advertisement

image

இந்நிலையில் தற்போது அந்த ஊழியர்களின் சில குறிப்பிட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அனைவரது கண்களையும் கலங்க வைத்திருக்கிறது. கொரோனா என்பது எளிதில் பரவக் கூடிய தொற்று நோய் என்பது அனைவரும் அறிந்ததே. இதனால் அந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பவர்களோ அல்லது உதவி செய்பவர்களோ தங்களுக்கும் அது பரவமால் இருக்க முகத்தில் மாஸ்க் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை அணிய வேண்டியது அவசியம்.

image


Advertisement

இப்படி அந்த ஊழியர்கள் கிட்டத்தட்ட 12 மணி நேரம், தொடர்ச்சியாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு முகத்தில் மாஸ்க் அணிந்து உதவி செய்ததால் அவர்களது முகத்தில் அப்படியே மாஸ்க்கின் தடம் பதிந்துள்ளது. இதனால் இரத்தக் கன்னல்கள் ஏற்பட்டதோடு, அவர்களது முகத்தில் தழும்பும் ஏற்பட்டிருக்கிறது. இருப்பினும் இதையெல்லாம் பொருட்படுத்தாது, அதனை தங்களது சேவையாக கருதி புன்னகையுடன் பணியாற்றி வரும் அவர்களை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

டிஎன்பிஎஸ்சி முறைகேடு: 6 பேர் சஸ்பெண்ட் 

மேலும் சீன அரசு ஆபத்து குறித்து எச்சரிக்கையின்றி இருந்த போதிலும், நோயாளிகளை காப்பாற்ற இவர்கள் கொடுக்கும் இந்த அர்ப்பணிப்பு மிக்க உழைப்பானது, கொரனோ வைரஸை முற்றிலும் ஒழிக்க உதவும் என தங்களது கருத்துகளை சமூக வலைத்தளவாசிகள் பதிவிட்டு வருகின்றனர்.


Advertisement

Advertisement
[X] Close