[X] Close

தனுஷுக்கு ஜோடியாகும் நித்யா மேனன்? ‘டி44’ அப்டேட்ஸ்

சினிமா

Psycho-actress-Nithya-Menen-to-pair-opposite-Dhanush-in-D44-

தனுஷின் ‘டி44’ படத்தில் அவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.


Advertisement

கோலிவுட் சினிமாவில் செம பிசியான நடிகராக இருக்கிறார் தனுஷ். ‘அசுரன்’ வெளியான அதே வேகத்தில் அவரது ‘பட்டாஸ்’ திரைப்படம் வெளியானது. இந்த இரண்டு படங்களும், அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வந்த ‘சுருளி’ படத்தில் நடித்து முடித்த தனுஷ், அடுத்த சில நாட்களில் மாரிசெல்வராஜ் இயக்கி வரும் ‘கர்ணன்’ படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

image


Advertisement

திருநெல்வேலி சுற்று வட்டாரத்தில் நடந்து வரும் இப்படப்பிடிப்பிற்கான படங்களை அவர் ஏற்கெனவே ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். கிராம பின்புலத்தை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில் தனுஷ் மிகவும் யதார்த்தமான தோற்றத்தில் நடித்து வருகிறார். இதனிடையே அவரது 44-வது படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் தொடங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

படங்கள் விற்பனை எப்படி நடக்கிறது..? லாப நஷ்டம் தெரிவது எப்படி..? தர்பாரில் என்னதான் சிக்கல்..?

இந்நிலையில் ‘டி44’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ‘சைக்கோ’ படத்தின் நாயகி நித்யாமேனன் நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. உதயநிதியுடன் இணைந்து நித்யாமேனன் நடித்த ‘சைக்கோ’ படத்தில் இவரது கதாபாத்திரத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்தன. இவர் ஏற்கெனவே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான ‘தி அயர்ன் லேடி’யில் ஜெயலலிதாவின் தோற்றத்தில் நடித்து வருகிறார்.


Advertisement

அந்தப் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது. ஆகவே ‘டி44’ படக்குழு இவரை தனுஷுக்கு ஜோடியாக நடிக்க வைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

image

இதற்குமுன் தனுஷின் ‘டி43’ படத்தை கார்த்திக் நரேன் இயக்க இருப்பதாக செய்தி ஒன்று ஏற்கெனவே உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 


Advertisement

Advertisement
[X] Close