டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு : தலைமறைவாக இருந்த இடைத்தரகர் ஜெயக்குமார் சரண்

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு : தலைமறைவாக இருந்த இடைத்தரகர் ஜெயக்குமார் சரண்
டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு : தலைமறைவாக இருந்த இடைத்தரகர் ஜெயக்குமார் சரண்

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விவகாரத்தில் சிபிசிஐடி போலீசாரால் தேடப்பட்டு வந்த ஜெயக்குமார் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேட்டில் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளியான இடைத்தரகர் ஜெயக்குமாரின் மோசடிக்கரம் பள்ளிக்கல்வித்துறை வரை நீண்டிருப்பதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின. பள்ளிக்கல்வித்துறை அதிகாரி ஒருவருடன் ஜெயக்குமாருக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஜெயக்குமாரை கைது செய்தால் மட்டுமே இந்த விவகாரத்தில் புதைந்து கிடக்கும் உண்மைகளை வெளிக்கொண்டுவர முடியும் என்பதால் அவரைத் தேடி கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு சிபிசிஐடி தனிப்படை விரைந்தது.

இந்நிலையில், இடைத்தரகர் ஜெயக்குமார் சென்னையில் உள்ள சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். டிஎன்பிஎஸ்சி குரூப் 4, குரூப் 2ஏ தேர்வுகளில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ஜெயக்குமார் பலநாட்களாக தலைமறைவாக இருந்தார். அவரை பிடித்து கொடுப்பவருக்கு சன்மானம் கொடுக்கப்படும் என்றும் காவல்துறை தரப்பில் விளம்பரம் செய்யப்பட்டது.

இத்தகைய சூழலில் அவரே நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார். ஜெயக்குமார் சரணடைந்துள்ளதால் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேட்டில் பல உண்மைகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com