Published : 05,Feb 2020 02:55 AM
குலதெய்வ கோயிலில் நடிகர் யோகிபாபு திருமணம்: திரைத்துறையினர் வாழ்த்து!

காமெடி நடிகர் யோகிபாபுவிற்கு அவரது குலதெய்வ கோயிலில் இன்று காலை திருமணம் நடைபெற்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. ரஜினி, அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் உண்டு. இந்நிலையில் யோகிபாபுவின் திருமணம் திருத்தணி அருகேயுள்ள அவரது குலதெய்வ கோயிலில் இன்று காலை நடைபெற்றது. மஞ்சு பார்கவி என்ற பெண்ணை அவர் திருமணம் செய்துள்ள நிலையில், வரும் மார்ச் மாதம் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
சபிதாராய் என்கிற நடிகைக்கும், யோகிபாபுவிற்கும் திருமணம் எனத் தகவல்கள் பரவிய நிலையில், அதற்கு யோகிபாபு மறுப்பு தெரிவித்திருந்தார். மேலும் திருமணம் நடக்கும்போது அதனை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன் எனவும் யோகிபாபு கூறியிருந்தார். இந்நிலையில் இன்று காலை யோகிபாபு திடீர் திருமணம் செய்துகொண்டுள்ளார். யோகிபாபுவிற்கு சினிமாத்துறையினர், ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
‘தமிழில்தான் ஹீரோ ஆவேன்’ - நிறைவேறிய ஹர்பஜன் சிங் ஆசை