Published : 06,Jun 2017 08:03 AM

வெயில் தாங்கல: காருக்குள் பாய்ந்த குதிரை காயம்!

horse-crashes-through-cars-windshield

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் குதிரை ஒன்று வெயில் கொடுமையால், காரை உடைத்துக்கொண்டு பாய்ந்தது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறும்போது, ''வெயிலின் தாக்கத்தைத் தாங்காமல் குதிரை தன் சேனையை உடைத்துக் கொண்டு, எதிர்ப்புறத்தில் வந்துகொண்டிருந்த காரின் உள்ளே பாய்ந்தது. காரின் பேனட் மீது ஏறிய குதிரை, முன்பக்கக் கண்ணாடியைக் உடைத்துக்கொண்டு உள்ளே நழைந்தது'' என்றனர்.

கார் ஓட்டுநரை உடனடியாக மீட்ட பொதுமக்கள், குதிரையை வெளியே இழுக்கச் பெரும்பாடு பட்டனர். காவல்துறையும், வனத்துறை அதிகாரிகளும் இணைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் கார் ஓட்டுநர் ஜோஷி காயமடைந்தார். அவருக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டது. காயமடைந்த குதிரைக்கு சிகிச்சை அளித்த கால்நடை மருத்துவர்கள், குதிரை ஓய்வில் இருப்பதாகவும், அதற்குப் பெரியளவில் காயங்கள் ஏற்படவில்லை என்றும் கூறினர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்