Published : 01,Feb 2020 06:51 AM

விளைபொருட்களை கொண்டு செல்ல கிஷான் ரயில்: நிர்மலா சீதாராமன்

Union-Budget-2020--Train-for-farmers

விவசாயிகளின் விளைபொருள்களை கொண்டு செல்ல உருவாக்கப்படும் கிஷான் ரயில், குளிர்பதன வசதி கொண்டதாக இருக்கும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார். அப்போது பேசிய அவர், விவசாயிகளின் விளைபொருள்களை கொண்டு செல்ல உருவாக்கப்படும் கிஷான் ரயில், குளிர்பதன வசதி கொண்டதாக இருக்கும் என தெரிவித்தார்.

image

மேலும், 'கிருஷி உடான்' என்ற புதிய திட்டத்தில் தேசிய, சர்வதேச விமான போக்குவரத்து மூலம் விவசாயப் பொருள்கள் எடுத்துச்செல்ல வசதி ஏற்படுத்தப்படும் என்றார். விவசாயிகளுக்கு ரூ.15 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், விவசாயிகளுக்கான கடன் அட்டை திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்