Published : 06,Jun 2017 02:34 AM

சிறுமியை கொடூரமாக தாக்கும் பெண்: வைரலாகும் வீடியோ

Women-attack-child--Viral-Video

மலேசியாவில் சிறுமியை, பெண் ஒருவர் இரக்கமேயில்லாமல் கொடூரமாக அடிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதையடுத்து அந்தப் பெண் கைது செய்யப்பட்டார்.

சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ள அந்த வீடியோவில், சிறுமி ஒருவர் ஒழுங்காகச் சாப்பிடவில்லை எனக் கூறி, பெண் ஒருவர் குச்சியால் காட்டுமிராண்டித்தனமாக அடிக்கிறார். சிறுமியோ, வலி தாங்க முடியாமல் கதறுகிறார். சிறுமி வலியால் துடித்த போதும், அந்தப் பெண் அடிப்பதை நிறுத்தவில்லை. பின்னர் இரக்கமற்ற அந்த கொடூர பெண் சிறுமியை காலால் எட்டி உதைக்கிறார். மொபைல் போனில் இந்த வீடியோ பதிவாகியுள்ளது.

மனதை பதைபதைக்க வைத்த இந்த மனிதாபிமானமற்ற தாக்குதல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனையடுத்து அந்தப் பகுதி மக்கள் அந்த பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் காவல்துறைக்கும் தகவல் அளித்தனர். பின்னர் காவல்துறையினர் சிறுமியை மீட்டதுடன் அந்தப் பெண்ணையும் கைது செய்தனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்