திருவள்ளூரில் சோழவரம் அடுத்துள்ள பழைய எருமை வெட்டிப்பாளையம் பகுதியில் தற்காலிக வாடிவாசல் அமைத்து ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது.
நாமக்கலை அடுத்துள்ள பாளையபாளையத்தில் தற்காலிக வாடிவாசல் அமைத்து தடையை மீறி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. கரட்டுப்புதூர் ஏரிக்கரையில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக வாடிவாசலில் 100க்கும் அதிகமான காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
இதே போல் சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் 15 க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. ஜல்லிக்கட்டுப் போட்டிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் நடுவீதியில் ஜல்லிக்கட்டு நடத்தினர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகேயுள்ள கட்டிக்குளத்திலும் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. திருப்பத்தூர் அருகே தென்கரைபாணி கண்மாயில் மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
மதுரை மாவட்டம் பாலமேட்டில் கோயில் பூஜைக்காக அழைத்து வரப்பட்ட காளைகளை அவிழ்த்து விட்டு ஜல்லிக்கட்டு நடந்தது.
பெரம்பலூர் அருகே பூலாம்பாடியில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே திருத்தங்கூரில் நாம் தமிழர் கட்சியினர் சார்பில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
இதேபோன்று நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே வாய்மேடு நடுக்காட்டில் காளைகளை அவிழ்த்துவிட்டு ஜல்லிக்கட்டு நடந்தது.
திருச்சியில் மணப்பாறை அடுத்த முத்தபுடையான்பட்டி, அரியமங்கலம், சோமரசம்பேட்டை மற்றும் செவலூரில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
வேலூர் மாவட்டத்தில் வாணியம்பாடி அருகே தமிழக-ஆந்திர எல்லையான வீரனமலையில் காளைகளை அவிழ்த்து விட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
Loading More post
வாழ்வா? சாவா? போராட்டத்தில் டெல்லி: இன்று மும்பை அணியுடன் மோதல்
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!