Published : 02,Jan 2017 04:12 PM

சென்னை ஓபன் டென்னிஸ் தொடர்... மெட்வடேவ், டூடி செலா 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

Chennai-ATP-Tennis-World-tour

தெற்காசியாவின் ஓரே ஏடிபி டென்னிஸ் தொடரான சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் முக்கிய சுற்று ஆட்டங்கள் தொடங்கின.

சென்னை நுங்கம்பாக்கம் எஸ்டிஏடி விளையாட்டரங்கில் நடைபெற்ற டென்னிஸ் போட்டியை காண ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் பிரேசில் வீரர் தியாகோ மொண்டைரோ, ரஷ்ய வீரர் டேனியல் மெட்வடேவ்-வை எதிர்த்து விளையாடினார். இந்தப்போட்டியில் ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய மெட்வடேவ் 6-3, 6-1 என்ற நேர்செட்களில் வெற்றி பெற்றார். மற்றொரு ஆட்டத்தில் ரூமேனிய வீரர் ஸ்டீவ் டார்சிஸ், குரேயேஷிய வீரர் மெக்டிச்சை நேர்செட்களில் தோற்கடித்தார். இதேபோல் இன்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் இஸ்ரேல் வீரர் துடி செலா ,போஸ்னியா வீரரை 6-2, 6-2 என்ற நேர் செட்களில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்