‘குரூப் 4’ முறைகேடுக்காக ஒரு வருடம் சதித்திட்டம் - 6 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி வழக்குப்பதிவு

‘குரூப் 4’ முறைகேடுக்காக ஒரு வருடம் சதித்திட்டம் - 6 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி வழக்குப்பதிவு
‘குரூப் 4’ முறைகேடுக்காக ஒரு வருடம் சதித்திட்டம் - 6 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி வழக்குப்பதிவு

குரூப் 4 முறைகேடு வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில், முறைகேட்டாளர்கள் ஓராண்டாக சதித்திட்டம் தீட்டியிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

குரூப் 4 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்களிடம் டிஎன்பிஎஸ்சி நடத்திய விசாரணையில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவே ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களை தேர்வு செய்ததாக ஒரே பதிலை அளித்துள்ளனர். வினா மற்றும் விடைத் தாள்கள் தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லும் வழியில், கண்காணிப்பு கேமரா இல்லாத இடத்திலிருந்து எடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ராமேஸ்வரம் வட்டத்தில் 6 தேர்வு மையங்களும், கீழக்கரை வட்டத்தில் 3 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்ட நிலையில், முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் ஒரே மையத்தில் தேர்வு எழுதவில்லை என்றும், 9 மையங்களிலும் தேர்வு எழுதியிருப்பதாகவும் டி.என்.பி.எஸ்.சி. கூறுகிறது.

கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பதவிகளை பெறுவதற்காக, தரவரிசைப் பட்டியலில் முன்னிலை பெறும் வகையில், தேர்வர்களிடமிருந்து தொகை வசூல் செய்யப்பட்டதாகவும், இடைத்தரகர்கள் 5 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை பெற்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்தது தொடர்பாக 6 பிரிவுகளில் சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை மையங்களில் குரூப் 4 தேர்வு எழுதியவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்காக முறைகேட்டாளர்கள் ஒரு வருடமாக சதித்திட்டம் தீட்டியிருக்கலாம் என தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக ராமேஸ்வரம் வட்டாட்சியர் பார்த்தசாரதி, கீழக்கரை வட்டாட்சியர் வீரராஜ், டி.என்.பி.எஸ்.சி. ஓட்டுநர் மற்றும் குரூப் 4 தேர்வு எழுதியவர்கள் உள்பட 12 பேரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் குரூப் 4 முறைகேடு தொடர்பாக கூட்டுச்சதி, மோசடி உள்ளிட்ட 6 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com