[X] Close

பெங்களூரு சிறையில் சசிகலாவுடன் தினகரன் சந்திப்பு

TTV-Dhinakaran-meets-Sasikala


பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவை, டிடிவி தினகரன் சந்தித்துப் பேசினார்.
தினகரனுடன் கோவை எம்பி நாகராஜ் மற்றும் எம்எல்ஏக்கள் வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்ளிட்ட 10 எம்எல்ஏக்களும் சசிகலாவை சந்தித்து ஆலோசனை நடத்தினர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்த டிடிவி தினகரன், ஏறக்குறைய 3 மாதங்களுக்குப் பின்னர் தற்போது சந்தித்துள்ளார். இரட்டை இலை சின்னத்தைப் பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் 40 நாட்களுக்கு மேலாக சிறையில் இருந்த டிடிவி தினகரன், கடந்த சனிக்கிழமை ஜாமீனில் வெளியே வந்தார். ஜாமீனில் வெளியே வந்த தினகரனுக்கு, அவரது ஆதரவாளர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். எம்எல்ஏக்கள் தங்க தமிழ்செல்வன், ராஜேந்திர பாலாஜி ஆகியோர் டெல்லி சென்று தினகரனை வரவேற்றனர். ஆனால், ஜாமீனில் வந்த தினகரனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியோ அல்லது மற்ற அமைச்சர்களோ இதுவரை சந்திக்கவில்லை. 

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close