Published : 22,Jan 2020 10:36 AM
நடிகை அமலா பாலின் தந்தை மறைவு - திரையுலகினர் இரங்கல்

நடிகை அமலா பாலின் தந்தை வர்கீஸ் பால் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு திரை நட்சத்திரங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் தனித்துவம் மிக்க நடிகை அமலா பால். இவர் விஜய், சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘அதோ அந்தப் பறைவை போல’ படம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், எதிர்பாராத விதமாக அவரது தந்தை வர்கீஸ் பால் நேற்று காலமானார். அவருக்கு வயது 61. அவருக்கு உடல்நிலை சரியில்லாததால் அவர் கொச்சியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி அவர் நேற்று மாலை உயிரிழந்தார்.
நடிகை அமலா, அவரது ‘அதோ அந்தப் பறவை போல’ படத்தின் புரமோஷனுக்காக சென்னையில் இருந்துள்ளார். செய்தி அறிந்ததும் அவர் உடனடியாக விமானம் பிடித்து கொச்சி சென்றுள்ளார். அவரது தந்தையின் இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடைபெற உள்ளது. இவரது மறைவுக்கு பல்வேறு திரைநட்சத்திரங்கள் தங்களின் இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.