மலையாளத்தின் ‘உஸ்தாத் ஹோட்டல்’ படத்தை இயக்கியவர் அன்வர் ரஷீத். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற அந்த திரைப்படத்திற்கு பிறகு அவர் படம் இயக்கவில்லை. கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் இடைவெளி விட்ட அன்வர் தற்போது பஹத் பாசில் நடிக்கும் ‘ட்ரான்ஸ்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்தப்படம் வரும் பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினத்தன்று வெளியாகவுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்தப் படத்தில் நஸ்ரியா நடித்துள்ளார். பஹத்தை திருமணம் செய்துகொண்ட பின்னர் நடிப்புக்கு இடைவெளி விட்ட நஸ்ரியா, ‘கூடே’ திரைப்படத்தில் மட்டுமே நடித்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் நஸ்ரியா திரையில் தோன்றவுள்ளதால் அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். சமீபத்தில் வெளியான ட்ரான்ஸ் படத்தின் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இன்று மீண்டும் ஒரு போஸ்டர் வெளியாகியுள்ளது.
இந்த போஸ்டரில் இயக்குநர் கவுதம் மேனனின் படமும் இடம்பெற்றுள்ளது. கோட் சூட் என கவுதம் மேனம் ஸ்டைலான லுக்கில் இருக்கிறார். இந்த போஸ்டரை நடிகர் பஹத் பாசில் வெளியிட்டுள்ளார். வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ் மூலம் பஹத் தமிழில் அறிமுகமான நிலையில் நஸ்ரியா, கவுதம் மேனன் ஆகியோரும் நடித்திருப்பதால் ட்ரான்ஸ் திரைப்படத்திற்கு தமிழகத்திலும் நல்ல வரவேற்பு இருக்கும் என்றே தெரிகிறது.
மன்னிப்பு கேட்கமாட்டேன் என ரஜினி ஆவேசம்.. ஆதரவும்.. எதிர்ப்பும்..!
Loading More post
இந்தியாவில் டெஸ்லா கார்கள் உற்பத்தி இல்லை: எலான் மஸ்க் அறிவிப்பின் காரணம் என்ன?
‘குளங்கள் அமைந்திருக்கும் அனைத்து மசூதிகளிலும் ரகசிய ஆய்வு’ - உச்சநீதிமன்றத்தில் மனு
‘பணிகளில் சுணக்கம் காட்டாதீர்கள்’-கலெக்டர்களுக்கு சுகாதாரத்துறை செயலர் அட்வைஸ்
பேத்தியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக வழக்கு - உத்தராகண்ட் முன்னாள் அமைச்சர் தற்கொலை
முதல்வரின் திடீர் கள ஆய்வு எதிரொலி: அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவிட்ட தலைமைச் செயலாளர்
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!