Published : 05,Jun 2017 05:30 AM

மழை கேப்பில் சச்சினை சந்தித்த தனுஷ்!

Dhanush-met-sachin

இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நேற்றைய போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியை காண கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கரும் வந்திருந்தார். ஏராளமான ரசிகர்களுடன் சினிமா பிரபலங்களும் வந்திருந்தனர். நடிகர் தனுஷும் சென்றிருந்தார். இந்நிலையில் அடிக்கடி மழை குறுக்கிட, போட்டி சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. இந்த கேப்பில் சச்சினை சந்தித்த தனுஷ், அவருடன் போட்டோ எடுத்துக்கொண்டார்.
இதை டிவிட்டரில் பகிர்ந்துள்ள தனுஷ், ‘ கிரிக்கெட்டின் ஒரே ஒரு கடவுள் சச்சினை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது’ என்று கூறியுள்ளார்.


 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்