Published : 05,Jun 2017 05:19 AM
லாரி-பஸ் மோதல்: 22 பேர் பலி

உத்திரபிரதேசத்தில் லாரியும் பேருந்தும் மோதிக்கொண்ட விபத்தில் 22 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.
உத்திரபிரதேச மாநிலம் பரேலியிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த சரக்கு லாரி ஒன்று எதிர்பாராத விதமாக பேருந்தின்மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.