அடக்கொடுமையே: பெற்ற குழந்தைகளை கொன்ற அம்மா!

அடக்கொடுமையே: பெற்ற குழந்தைகளை கொன்ற அம்மா!
அடக்கொடுமையே: பெற்ற குழந்தைகளை கொன்ற அம்மா!

தான் பெற்ற இரட்டைக் குழந்தைகளை, தாயே கொன்று புதைத்த சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே காற்றாடிதட்டுவிளை பகுதியை சேர்ந்தவர்கள், கண்ணன்- திவ்யா தம்பதியினர். கடந்த 22 ஆம் தேதி இவர்களுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. பிறந்து 10 நாட்களே ஆன நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் திடீரென இரு குழந்தைகளும் ஒரே நேரத்தில் மர்மமான முறையில் இறந்துள்ளது. பின்னர் அவசர அவசரமாக இந்தக் குழந்தைகள் அடக்கம் செய்யப்பட்டன. இதனிடையே இந்த குழந்தைகள் இறப்பில் மர்மம் இருப்பதாகச் சந்தேகம் அடைந்த சிலர், மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிக்குத் தகவல் கொடுத்தனர். அதனடிப்படையில் கோட்டாறு போலீசார், கண்ணன்- திவ்யா தம்பதியிடம் விசாரணை மேற்கொண்டனர்.
 இந்நிலையில் குழந்தைகள் இறந்தது இயற்கையாகவா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்பதை அறியும் வகையில் அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அருள் அரசு முன்னிலையில் அரசு மருத்துவர்கள் குழந்தைகள் புதைக்கப்பட்ட இடத்தைத் தோண்டினர். பின்னர் சடலங்களை எடுத்து பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். அது இயற்கை மரணமில்லை என்று தெரியவந்தது. பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் பெற்றக் குழந்தைகளை, தாயே கொன்று புதைத்தது தெரிய வந்தது. 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com