Published : 05,Jun 2017 04:46 AM

வீட்டு வாசலில் அதிமுக பிரமுகர் வெட்டிக்கொலை!

ADMK-caddle-Murder-in-chennai

சென்னை எம்.ஜி.ஆர். நகரில் அதிமுக பிரமுகர், வீட்டு வாசலிலேயே வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை எம்.ஜி.ஆர். நகர், சூளை பள்ளம் பகுதியில் அதிமுக வட்ட துணைச் செயலாளராக இருப்பவர், குமார் என்கிற சின்னகுமார். நேற்றிரவு இவர் வீட்டு வாசலில் நின்றுகொண்டிருந்தார். அப்போது டூ வீலரில் வந்த 3 பேர், திடீரென அவரை சரமாரியாக வெட்டிச் சாய்த்துவிட்டு தப்பியோடினர். ரத்த வெள்ளத்தில் சாய்ந்த குமார் உயிருக்குப் போராடினார். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அவரைச் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குமார் இறந்தார். இதுகுறித்து எம்.ஜி.ஆர் நகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

இறந்த குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த கொலையில் அரசியல் நோக்கம் இருக்குமோ என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரித்து வருக்கின்றனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்