[X] Close

மசூதியில் இந்து மத பாரம்பரியச் சடங்குகளுடன் திருமணம் - குவியும் பாராட்டுகள்..!

இந்தியா

Kerala-mosque-hosts-a-Hindu-wedding

கேரளாவில் உள்ள ஒரு மசூதியில் இந்து மத பாரம்பரியச் சடங்குகளுடன் திருமணம் நடத்தப்பட்டது அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

கேரள‌ மாநிலம் ஆ‌லப்புழா அருகே செருவல்லி ஜமாத் மசூதி உள்ளது. இங்கு அரிய நிகழ்வாக இந்து மத பாரம்பரிய சடங்குகளுடன் திருமணம் நடைபெற்றது. மணப்பெண் அஞ்சு, ஏழைக்குடும்பத்தை சேர்ந்தவர். தன் மகள் திருமணத்தை நடத்தி வைக்கும்படி அஞ்சுவின் தாயார், செருவல்லி ஜமாத் கமிட்டியிடம் உதவி கோரியுள்ளார்.

image


Advertisement

இதனை ஏற்றுக் கொண்ட மசூதி நிர்வாகம், அஞ்சுவுக்கும் மணமகன் சரத்துக்கும் மசூதியில் இந்து மத முறைப்படி திருமணம் நடத்தி வைத்தது. ஜமாத்தின் அழைப்பின் பேரில் மணப்பெண் அஞ்சுவுக்கு 10 சவரன் தங்க நகைகள், ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்களை முஸ்லீம் மக்கள் வழங்கினர். இந்த திருமண விழாவில் கலந்துகொண்ட சுமார் 2500 பேருக்கு விருந்து வழங்கப்பட்டது.

image

இந்துக்கள், இஸ்லாமியர் என இருதரப்பினரும் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமண புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ள கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ''மணமக்களுக்கு என் வாழ்த்துகள். கேரள மாநிலத்தின் மத நல்லிணக்கத்துக்கு இது ஒரு எடுத்துக்காட்டு'' எனக் கூறியுள்ளார்.


Advertisement

 


Advertisement

Advertisement
[X] Close