[X] Close

ஐயையோ: உயிரைக் கொன்றது டாட்டூ!

Tattoo-kills-a-man


உடலில் வரைந்த டாட்டூ, உயிரைக் கொன்ற சம்பவம் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியை சேர்ந்த 31 வயது இளைஞருக்கு எல்லோரையும் போல டாட்டூ குத்திக்கொள்ளும் ஆசை ஏற்பட்டது. இதையடுத்து தனது வலது காலில் ‘Jesus is my life’ என்று டாட்டூக் குத்திக்கொண்டார். இதை குத்தினால், அந்த இடத்தில் தினமும் சில முறை ஆயின்மென்ட் தடவ வேண்டும் என்றும் ஒரு வாரம் இடத்தில் இன்பெக்‌ஷன் ஏற்படாமல் கவனமாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பாகத் தண்ணீர் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் கூறியுள்ளனர். குறிப்பாக சில வாரங்கள் நீந்த கூடாது என்றும் தெரிவித்துள்ளனர்.

அந்த இளைஞர் அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் டாட்டூ குத்திய நான்கு நாட்களுக்குப் பிறகு ஐந்து பீர் கேனை காலி பண்ணிவிட்டு மெக்ஸிகோ வளைகுடாவில் குதித்து நீந்தினார். பின்னர் வீட்டில் வந்து படுத்தார். ஏற்கனவே நன்றாகக் குடிப்பார் போலிருக்கிறது. டாட்டூ குத்திய இடத்தில் வலி ஏற்பட, மருத்துவமனைக்கு ஓடியிருக்கிறார். பரிசோதித்த டாக்டர்கள் டாட்டூ குத்திய இடத்தில் இருந்து ஏற்பட்ட தோலை அரிக்கும் பாக்டீரியா உடலுக்குள் பரவியதைக் கண்டுபிடித்தனர். அவருக்கு ஏற்கனவே கல்லீரல் பிரச்னையும் இருந்ததால் அவர் உடல் திடீரென மோசமடைந்தது. அவர் உயிரைக் காப்பாற்ற டாக்டர்கள் போராடினர். முடியவில்லை. மரணமடைந்து விட்டார் அந்த இளைஞர். 
இந்த சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close