தன் தங்கையை திருமணம் செய்துவைக்க வற்புறுத்தியதால் நண்பரை கொன்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு மாவட்டம் வெட்டுகட்டுவலசு பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் (25). விசைத்தறி கூடத்தில் வேலை செய்த விக்னேஷ், தன் தங்கையுடன் அதே பகுதியில் வசித்து வந்துள்ளார். ஈரோடு விக்னேஷுக்கு தன்னுடன் வேலை பார்த்த கொளத்தூரைச் சேர்ந்த விக்னேஷ் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது.
நண்பன் என்ற முறையில் ஈரோடு விக்னேஷ் வீட்டுக்கு, கொளத்தூர் விக்னேஷ் அடிக்கடி சென்று வந்துள்ளார். இதில் ஈரோடு விக்னேஷின் தங்கை மீது கொளத்தூர் விக்னேஷுக்கு ஒருதலையாக காதல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனை தன் நண்பனிடம் கொளத்தூர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஈரோடு விக்னேஷ், அவரை கண்டித்துள்ளார்.
“ என் அறையில் ஜெர்ரி இருக்கிறது; டாம் உடன் வாருங்கள்” - வைரலான தொலைபேசி உரையாடல்!
இந்நிலையில் கடந்த 16-ம் தேதி கொளத்தூர் விக்னேஷ் ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் ஈரோடு விக்னேஷை கைது செய்தனர். தன் தங்கையை திருமணம் செய்துவைக்கக் கோரி வற்புறுத்தியதால் நண்பனை கொன்றதாக ஈரோடு விக்னேஷ் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து திருச்செங்கோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஈரோடு விக்னேஷ் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Loading More post
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
``எந்த வகுப்புக்கு எப்போது பள்ளி திறப்பு?”- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்
கோயம்பேடு சந்தை: பெட்ரோல், டீசல் விலை குறைவால் சரிந்தது தக்காளி விலை! இன்றைய நிலவரம் என்ன?
காஷ்மீரில் பட்டப்பகலில் போலீஸ் காவலர் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் அட்டூழியம்
மில்லரின் 'கில்லர்' பேட்டிங் - ராஜஸ்தானை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிய குஜராத்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!