திமுக-காங்கிரஸ் கூட்டணியில் எந்தப் பிளவும் இல்லை என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி சந்தித்து பேசினார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.அழகிரி, “ ‘தர்பார்’ படம் குறித்து பேசினோம். ஸ்டாலின் தர்பார் படம் நன்றாக இருந்ததாக கூறினார். நீங்கள் பார்த்துவிட்டீர்களா என்று கேட்டார். நான் இல்லை என்று சொன்னேன். ரஜினி ரொம்ப நல்லவர். ரஜினி கூறிய கருத்து வாய் தவறி வந்திருக்கும். ரஜினி துக்ளக்குடன் முரசொலியை இணைத்து பேசியது தவறு. ஒன்று துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்பார்கள் என்று மட்டும் சொல்லியிருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் முரசொலி வைத்திருந்தால் திமுகவினர் என்பார்கள் என்று மட்டும் சொல்லியிருக்க வேண்டும். ரஜினி இந்த கருத்தை சொந்தமாக யோசித்து பேசியுள்ளார். அதனால் குழம்பிவிட்டார். சினிமாவாக இருந்திருந்தால் வசனங்கள் எழுதி கொடுத்திருப்பார்கள்.
மேலும், திமுக - காங்கிரஸ் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பது குறித்து பேசினோம். திமுக - காங்கிரஸ் கூட்டணியில் எந்த பிளவும் இல்லை. திமுக கூட்டணி கட்சிகளிடையே ஆரோக்கியமான விவாதம் வந்து போகும். 2021ல் நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலிலும் திமுக காங்கிரஸ் கூட்டணி தொடரும். கொள்கை ரீதியாகவே கூட்டணியில் சேர்ந்துள்ளோம். இந்த தேசத்தின் மனசாட்சி என்பது நாங்கள்தான். குடியுரிமை திருத்தச் சட்டத்தில் சிறு கருத்தை கூட சொல்ல முடியாத கட்சிதான் அதிமுக. திமுக கூட்டணிக் கட்சிகளை அதிமுக கூட்டணிக் கட்சிகளுடன் ஒப்பிட முடியாது. என்னுடைய கட்சி எனக்கு முழு சுதந்திரத்தை அளித்துள்ளது. என் கட்சி எனக்கு எந்த அழுத்தத்தையும் தரவில்லை. தனித்து நிற்க எந்த கட்சிக்கும் செல்வாக்கு இல்லை. இது அனைவருக்கும் தெரியும்.
மதச்சார்பற்றவர் எனக்கூறும் கமல், ரஜினிமூலம் மறைமுகமாக பாஜகவின் ஆதரவை நாடுகிறாரா? அனைத்திற்கும் தலையாட்டுபவர்கள் சிறந்த நண்பர் இல்லை” எனத் தெரிவித்தார்.
Loading More post
சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த ரவுடி சில மணி நேரத்திலேயே வெட்டிப்படுகொலை
டீ விலை ₹20; சர்வீஸ் சார்ஜ் ₹50; நல்லா இருக்கு இந்த பார்ட்னர்ஷிப்: IRCTC-ஐ சாடிய மக்கள்!
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: யார் கேப்டன்?
பக்ரைனில் இறந்த தொழிலாளி...நல்லடக்கம் செய்ய கைகோர்த்த ரஜினி ரசிகர் மன்றத்தினர்
மீண்டும் மிரட்டும் கொரோனா - பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம்
எச்சரிக்கை: சைலண்ட் கில்லராகும் High BP.. இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide