Published : 05,Jun 2017 02:27 AM

எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் மல்லையா: கலாய்த்து துவைத்த நெட்டிசன்கள்!

Vijay-Mallya-Enjoys-India-Pak-Clash-at-Edgbaston

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முக்கிய ஆட்டமான இந்தியா-பாகிஸ்தான் போட்டியை பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா நேரில் பார்த்து ரசித்துள்ளார். 

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முக்கிய ஆட்டமான இந்தியா-பாகிஸ்தான் போட்டி இங்கிலாந்தின் எட்ஜ்பஸ்டன் நகரில் நேற்று நடந்தது. இந்தப் போட்டியை நேரில் கண்டு ரசிக்க இந்தியா மற்றும் பாகிஸ்தான் ரசிகர்கள் ஆவலுடன் மைதானத்தில் குவிந்திருந்தனர். 
இந்நிலையில், சுமார் 9000 கோடி கடன் பெற்றுவிட்டு இங்கிலாந்து நாட்டிற்கு தப்பியோடிய தொழிலதிபர் விஜய்மல்லையாவும் போட்டியை நேரில் காண வந்திருந்தார். அவர் கிரிக்கெட் போட்டியை கண்டுகளிக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைராலாகி வருகிறது. விஜய் மல்லையாவுடன் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவாஸ்கர் அமர்ந்து பேசுவது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி நெட்டிசன்களின் மீம்ஸ்க்கு ஆளாகியுள்ளது. 
மோசடி மன்னன், குற்றவாளி தைரியமாக கிரிக்கெட் போட்டியை கண்டுக்களிக்கிறார் என பல கமெண்ட்களை நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்