கேரள மாநிலத்தை தொடர்ந்து, பஞ்சாப் சட்டசபையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பாகிஸ்தான், ஆப்கான், வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகளைச் சேர்ந்த மதரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளான இந்துக்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட 6 மதத்தினர் இந்தியாவில் குடியுரிமை பெறுவதற்காக குடியுரிமைச் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது. இந்தக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சிஏஏ) மத அடிப்படையில் பாகுபாட்டினை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
‘தோனி இனிமேல் விளையாட வாய்ப்பில்லையா..?’ - பிசிசிஐ ரூல்ஸ் சொல்வது என்ன ?
குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்கள் மற்றும் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். முதல் மாநிலமாக, கேரள மாநில சட்டசபையில் சிஏஏவுக்கு எதிராக ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், கேரளாவைத் தொடர்ந்து, காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் மாநில சட்டசபையில் சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இரண்டு நாள் சிறப்பு சட்டசபைக் கூட்டத் தொடரில் அம்மாநில அமைச்சர் மொஹிந்திரா இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.
‘பிரதமர் மோடி இந்திய குடிமகன் என்பதற்கு ஆதாரம் என்ன?’ - ஆர்டிஐ-ல் மனு
‘நாடாளுமன்றத்தின் ஒப்புதலுடன் கொண்டுவரப்பட்டுள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்து, அமைதியற்ற சூழல் நிலவுகிறது. பஞ்சாப் மாநிலத்திலும் இந்தச் சட்டத்திற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன’ என்று அந்தத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்
சர்ச்சைக்கு மத்தியில் தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளின் படங்களை வெளியிட்டது தொல்லியல் துறை!
சென்னையில் ‘ரூட் தல’ விவகாரம்: பயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொண்ட கல்லூரி மாணவர்கள்
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?