Published : 04,Jun 2017 04:44 PM

அனுமதியில்லாமல் இந்திய எல்லைக்குள் நுழைந்த சீன ஹெலிகாப்டர்

Chinese-helicopter-violates-Indian-air-space-in-Uttarakhand

சீன ஹெலிகாப்டர் ஒன்று அனுமதியில்லாமல் இந்திய எல்லைக்குள் நுழைந்தது தொடர்பாக இந்திய விமானப்படை விசாரணை நடத்தி வருகிறது. 

இந்தியா-சீனா எல்லையில் உள்ள உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தின் பரஹோட்டி பகுதி வான்வெளியில் சீன ஹெலிகாப்டர் நுழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சமோலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரிபாதி பட், பரஹோட்டி வான்வெளியில் சீனாவைச் சேர்ந்த ஹெலிகாப்டர் ஒன்று காலை 9.15 மணிக்கு நுழைந்தது. ஏறக்குறைய 4 நிமிடங்கள் இந்திய வான்வெளியில் அந்த ஹெலிகாப்டர் சுற்றித் திரிந்தது என்று தெரிவித்தார். மேலும், இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வது வாடிக்கையாகிவிட்டதாகவும் திரிபாதி பட் தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக இந்திய விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்