[X] Close

‘தோனி இனிமேல் விளையாட வாய்ப்பில்லையா..?’ - பிசிசிஐ ரூல்ஸ் சொல்வது என்ன ?

விளையாட்டு,சிறப்புச் செய்திகள்

BCCI-annual-player-contracts---Dhoni-can-play-or-Not--

சர்வதேச இந்திய அணியில் இனிமேல் தோனி விளையாட வாய்ப்பில்லை எனத் தகவல் பரவும் நிலையில், பிசிசிஐ விதிமுறைப்படி அவர் விளையாடலாம் எனத் தெரியவந்துள்ளது.


Advertisement

தோனியை மீண்டும் இந்திய அணியின் சீருடையுடன் பார்த்துவிடலாம் என்ற ஏதோ ஒரு நம்பிக்கையில் இருந்த அவரது ரசிகர்களுக்கு நேற்று முன்தினம் வெளியான செய்தி அதிர்ச்சியையும், சோகத்தையும் ஒருங்கே ஏற்படுத்தியிருந்தது. பிசிசிஐ வெளியிட்டிருந்த வீரர்களின் வருடாந்திர ஒப்பந்தப் பட்டியலில் தோனியின் பெயர் இடம்பெறாது என அவரது ரசிகர்கள் யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

இந்திய அணியைப் பொறுத்தவரை கிரேட் ஏ+, கிரேட் ஏ, கிரேட் பி, கிரேட் சி ஆகிய நான்கு பிரிவுகளில் வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டு, பிரிவுக்கு தகுந்தவாறு சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. சென்ற வருடம் வரை தோனி கிரேட் ஏ+ பிரிவில் இடம்பெற்றிருந்தார். அவருக்கு 5 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு ஏ+ பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீரர் மகேந்திர சிங் தோனியின் பெயர் இடம்பெறவில்லை.


Advertisement

image

பிசிசிஐ வெளியிட்டுள்ள ஒப்பந்த பட்டியலின் படி, கிரேட் ஏ+ நிலையில், கேப்டன் விராட் கோலி, ரோகித் ஷர்மா மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் உள்ளனர். கிரேட் ஏ நிலையில், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, புவனேஸ்வர் குமார், புஜாரா, ரஹானே, ஷிகர் தவான், முஹம்மத் ஷமி, இஷாந்த் ஷர்மா, குல்தீப் யாதவ், ரிஷாப் பண்ட் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் உள்ளனர். கிரேட் பி பிரிவில், உமேஷ் யாதவ், யஷ்வேந்திர சாஹல், ஹர்திக் பாண்ட்யா, சாஹா, மயங்க் அகர்வால் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதுதவிர கிரேட் சி பிரிவில், கேதர் ஜாதவ், மணிஷ் பாண்டே, ஹனுமா விஹாரி, நவ்தீப் சைனி, தீபக் சாஹர், ஷர்துல் தகூர், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் உள்ளனர்.

image


Advertisement

இதில் கிரேட் ஏ+ பிரிவில் உள்ளவர்களுக்கு இந்திய ரூபாய் மதிப்பில் ஒரு வருடத்திற்கு ரூ.7 கோடியும், கிரேட் ஏ பிரிவு வீரர்களுக்கு ரூ.5 கோடியும், கிரேட் பி வீரர்களுக்கு ரூ.3 கோடியும், கிரேட் சி வீரர்களுக்கு ரூ.1 கோடியும் வழங்கப்படும். கடந்த ஆண்டு ஒப்பந்தப் பட்டியலில் இருந்த மகேந்திர சிங் தோனி, அம்பத்தி ராயுடு, தினேஷ் கார்த்திக் மற்றும் கலீல் அகமது ஆகிய 4 வீரர்களுக்கும் இந்த வருடம் இடம் அளிக்கப்படவில்லை. இவர்களில் தோனி பெயர் இடம்பெறாததே தற்போது இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் கவலையாகவும், பேசு பொருளாகவும் மாறியுள்ளது. 2019ஆம் ஆண்டு நியூஸிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் ரன் அவுட் ஆனதும் கண் கலங்கிச் சென்ற தோனி இதுவரை அணிக்குத் திரும்பவில்லை. அன்று முதல் அவரது ரசிகர்களும் எந்தத் தொடரிலாவது தோனியின் பெயர் அணியின் பட்டியலில் வெளிவராதா என எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

image

இந்நிலையில் வருடாந்திர ஒப்பந்த வீரர்கள் பட்டியலில் தோனி பெயர் இல்லை என்பதால், இனி தோனி விளையாடவே முடியாது என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதைக்கண்ட தோனி ரசிகர்கள், அவருக்கு ஒரு ஃபேர்வெல் போட்டியை வைக்க வேண்டும் என பிசிசிஐ-யிடம் கோரிக்கை வைத்து பதிவிட்டுக் கொண்டுள்ளனர்.

image

ஆனால் பிசிசிஐ விதிமுறையின் பட்டியலில் இருக்கும் வீரர்கள் தான் அணிக்காக விளையாட முடியும் என்றில்லை. இந்தப் பட்டியலில் இருக்கும் வீரர்கள் பிசிசிஐ-யின் தேசிய தேர்வுக்குழு என்ற ஒரு குழுவினால் தேர்வு செய்யப்படுவதாகவும் இந்தத் தேர்வு முறையில், கடந்த ஆண்டு வீரர்கள் விளையாடிய நிலையைக் கொண்டு அவர்களுக்கு கிரேட் வழங்கப்படுவதாகவும் மற்றபடி, இந்தப் பட்டியலில் இல்லாத நபர்களும் இந்திய அணிக்காக விளையாட முடியும் என்றும் அப்படி விளையாடும் வீரர்கள் முதல் இரண்டு போட்டியில், குறிப்பிட்ட சம்பளத்திற்கு விளையாடுவார்கள் என்பதும் பின்னர் அவர்களுக்கு கிரேட் சி நிலை வழங்கப்படும் என்பதும் அந்த வகையில் தோனி விளையாடவும் வாய்ப்பு இருக்கிறது என பிசிசிஐயின் வலைத்தளத்தில் கூறப்பட்டுள்ள விதிமுறையின் தெரிய வருகிறது.

image

இந்த ஒப்பந்தம் அக்டோபர் 2019ஆம் ஆண்டு முதல் செப்டம்பர் 2020 ஆண்டு வரைக்கான ஒப்பந்தம் ஆகும். ஆனால் ஐசிசி-யின் டி20 உலகக் கோப்பை 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தான் நடைபெறவுள்ளது. எனவே அந்தத் தொடரில் தோனியை இந்திய அணிக்குள் கொண்டுவரவும் வாய்ப்பிருக்கிறது. தோனி மீண்டும் அணியில் இடம்பெறுவாரா ? என்ற கேள்விக்கு, தோனி ஐபிஎல் தொடரில் விளையாடுவதை பொறுத்து ஆலோசிப்போம் என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ஏற்கெனவே தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு லெஜெண்டுக்கு இப்படியா விடை கொடுப்பீர்கள்..! ஆதங்கப்படும் தோனி ரசிகர்கள்


Advertisement

Advertisement
[X] Close