[X] Close

விராத் கோலி, ரோகித் ஷர்மா அதிரடி... பாகிஸ்தானுக்கு 324 ரன்கள் இலக்கு

India-Scores-mammoth-319-3-in-CT-clash-against-pakistan

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு 324 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 


Advertisement

முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 48 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 319 ரன்கள் எடுத்தது. டக்வொர்த் லீவிஸ் முறைப்படி பாகிஸ்தான் அணிக்கு 48 ஓவர்களில் 324 ரன்கள் இலக்காக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.  எட்ஜ்பாஸ்டனில் நடந்து வரும் இந்த போட்டியில் ஷிகர் தவான் மற்றும் ரோகித் ஷர்மா இணை இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. நிதானமாக ஆட்டத்தைத் தொடங்கிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 136 ரன்களைக் குவித்தது. தவான் 68 ரன்களிலும், ரோகித் ஷர்மா 91 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதன்மூலம் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் 3 முறை 100 ரன்களைக் குவித்த முதல் ஜோடி என்ற சாதனையையும் ஷிகர் தவான் - ரோகித் ஷர்மா ஜோடி படைத்தது. இதையடுத்து கைகோர்த்த விராத் கோலி - யுவராஜ் சிங் இணை, அதிரடியாக ரன்களைக் குவித்தது. 3ஆவது விக்கெட்டுக்கு 93 ரன்கள் சேர்ந்திருந்த நிலையில், யுவராஜ் சிங் ஆட்டமிழந்தார். அவர் 32 பந்துகளில் 53 ரன்கள் குவித்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் கோலி 81 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் அதிரடி காட்டிய ஹர்திக் பாண்ட்யா 3 சிக்ஸர்கள் உதவியுடன் 6 பந்துகளில் 20 ரன்கள் குவித்தார். 48 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 319 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் ஹசன் அலி மற்றும் ஷதாப் ஹூசைன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். போட்டியின் போது இருமுறை மழை குறுக்கிட்டதால், போட்டி 48 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. 
 


Advertisement

Advertisement
[X] Close