விஜயின் அடுத்த படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாகவே ரஜினிகாந்த், அஜித் மற்றும் விஜய் ஆகியோர் ஆக்ஷன் படங்களில் மட்டுமே நடித்து வருகின்றனர். உணர்வுப்பூர்வமான குடும்ப கதைகளை அவர்கள் அதிகம் தேர்வு செய்வதில்லை. அதிலிருந்து விலகி இருக்கிறார்கள். கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான அஜித்தின் 'விஸ்வாசம்' ஒரு கிராமப்புற குடும்ப பின்னணியை கொண்ட படமாக இருந்தது. இதற்குப் பார்வையாளர்களிடமிருந்து பெரும் ஆதரவு கிடைத்தது. இப்படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டராக வெற்றி பெற்றது.
ஆகவேதான் ரஜினிகாந்த் தனது 168-ஆவது திரைப்படத்திற்காக 'விஸ்வாசம்' இயக்குநர் சிறுத்தை சிவாவை தேர்ந்தெடுத்தார். ரஜினியுடன் இவர் இணைந்து எடுத்து வரும் இந்தப் படம் கிராம பின்னணியில், ஒரு பொழுதுபோக்கு குடும்ப திரைப்படமாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
இப்போது ரஜினிகாந்த் பாணியை விஜய் பின்பற்ற தொடங்கி உள்ளதாக தெரிகிறது. ’மாஸ்டர்’ படத்திற்குப் பின் விஜய் நடிக்க உள்ள அடுத்த படம் குறித்து சில தகவல்கள் இப்போது கசிய தொடங்கி உள்ளன. அவர் தனது அடுத்த இயக்குநராக பாண்டிராஜை தேர்ந்தெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. கிராமப்புற கதைகளை இயக்குவதில் கைதேர்ந்தவர் பாண்டிராஜ். ஆகவே அவர் விஜயுடன் கைகோர்க்க உள்ளதாக கூறப்படுவதால், அது குடும்பக் கதையாகவே இருக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பாண்டிராஜ் குடும்பக் கதை பின்புலத்தை வைத்து இயக்கிய 'கடைக்குட்டி சிங்கம்' மற்றும் 'நம்ம வீட்டு பிள்ளை' ஆகிய அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் படங்களாக அமைந்தன. இவர்தான் விஜய்யின் 65-வது படத்தை இயக்கப்போகிறார் என்றால் அது நிச்சயம் இந்தப் பாணியில்தான் இருக்கும்.
விஜய் தற்போது அவரது 64-ஆவது படமான 'மாஸ்டர்' படப்பிடிப்பில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். படத்தின் நான்காம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது. 'மாஸ்டர்' படப்பிடிப்பு முடிந்ததும் விஜய் தனது 65-ஆவது படம் குறித்து அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!