அந்தப்பெண் உயிர் பிழைத்தது அதிர்ஷ்டம்தான். ஐந்து நொடிகளில் நிகழ இருந்த ரயில் விபத்தில் இருந்து தனது சமயோசித முடிவால் மரணத்தை வென்றிருக்கிறார் அந்த 19 வயது பெண்.
மும்பையில் உள்ள குர்லா ரயில் நிலையத்தில் கடந்த மாதம் 13 ம் தேதி நடைபெற்ற அந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பதபதப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பாந்தப் பகுதியைச் சேர்ந்தவர் ப்ரதிக்ஷா நடேகர். தனது நண்பரை பார்க்க கடந்த மாதம் 13 ம் தேதி குர்லா ரயில் நிலையத்திற்கு சென்றார். பகல் 11 மணியான அப்போது காதில் ஹெட்போனை மாட்டிக்கொண்டு செல்போனில் பேசியபடி 7வது ப்ளாட் பாரத்தை டிராக் வழியே கடக்க முயன்றார். அவர் எதிர்பார்த்திராத நிலையில் அருகில் வந்துவிட்டது சரக்கு ரயில். கர்ணம் தப்பினால் மரணம் என்ற நிலை. ப்ளாட் பாரத்தில் நடுவில் நின்ற அவருக்கு தப்பிக்கவே வழியில்லாத நிலை. சில அடி தூரத்தில் மிக நெருக்கத்தில் வந்து விட்டது ரயில். தப்பிக்க அங்கும் இங்கும் ஓடியலைந்தார். முயற்சிகள் பலனளிக்கவில்லை. கண்முன் மரணம் நிகழபோகிறது என்பதை உணர்ந்த ப்ளாட்பாரத்தில் நின்றிருந்த பயணிகள் கதறி ஓலமிட்டனர். அதற்குள் மூன்றடி பக்கத்தில் வந்து விட்டது ரயில். மரணம் நெருங்கி விட்டதை உணர்ந்த அந்தப்பெண் காதைப் பொத்திக்கொண்டு அலறித்துடித்தார். யோசிக்கக் கூட நேரமில்லாத ப்ரதிக்ஷா திடீரென சமயோசிதமாக செயல்பட்டார்.
ரயில்வே தண்டவாளங்களில் நடுவில் நின்றிருந்த அவர் ரயில் நெருங்கும் ஒரு நொடியில் கீழே படுத்து விட்டார். உயிரை இழக்க இருந்த அவர் ரயில் தண்டவாளங்களுக்கு இடையில் படுத்ததால் உயிரை காப்பாற்றிக்கொண்டார் ப்ரதிக்ஷா. சில சிராய்ப்புகளுடன் அதிர்ச்சியடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பியிருக்கிறார். ரயில் நிலையத்தில் இருந்த சிசிடிவியில் பதிவான அந்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாக வலம் வருகிறது.
Loading More post
“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்
சர்ச்சைக்கு மத்தியில் தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளின் படங்களை வெளியிட்டது தொல்லியல் துறை!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?