[X] Close

சென்னையில் காற்று மாசு - வாகன ஓட்டிகள் சிரமம்

தமிழ்நாடு

air-pollution-in-chennai

சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.


Advertisement

பொங்கலுக்காக வீட்டை சுத்தம் செய்யும்போது, வீட்டிலிருக்கும் தேவையற்ற பொருட்களை தீயிட்டுக் கொளுத்துவது காலம் காலமாக இருந்து வரும் பழக்கம். இதையொட்டி,சென்னையில் காலை முதலே போகிப் பண்டிகை விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பயனற்ற பொருட்களை எரித்தும், மேளம் அடித்தும் போகியை மக்கள் வரவேற்றனர்.

சென்னையில் மக்கள் பழைய பொருட்கள், பாய், பழைய துணிகள் போன்றவற்றை எரித்தும்,சிறுவர்கள் மேளம் அடித்தும் போகிப் பண்டிகையை கொண்டாடினர். இதனால் பல பகுதிகளில் மார்கழி பனியை விரட்டும் அளவுக்கு புகை மூட்டம் காணப்படுகிறது. இதனிடையே நெகிழிப் பொருட்களை தீயிட்டு கொளுத்தி சுற்றுச்சூலுக்கு மாசு ஏற்படுத்த வேண்டாம் என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.ந்நிலையில், போகிப் பண்டிகையால் சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளது. மணலியில் 795 குறியீடுகளாகவும் அண்ணாசாலையில் இருக்கக்கூடிய அமெரிக்க தூதரகத்தில் 272 குறியீடுகளாகவும் ஆலந்தூரில் 161 குறியீடுகளாகவும் குறைந்த பட்சமாக வேளச்சேரியில் 100 ஆகவும் காற்று மாசு பதிவாகியுள்ளது.


Advertisement

Image result for காற்று மாசு சென்னை

50 லிருந்து 100 குறியீடுக்குள் இருந்தால் மட்டும் அது சுவாசிக்க ஏதுவான காற்றாக பார்க்கப்படுகிறது. ஆனால் சென்னையில் முற்றிலும் சுவாசிக்க ஏதுவான காற்று இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. இந்தக் காற்றால் பல உடல் உபாதைகள் ஏற்படும். குறிப்பாக நுரையீரல் சம்பந்தமான பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும் வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். அனைவரும் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே வாகனங்களை ஓட்டி செல்கின்றனர். விமானங்களும் தரையிறக்குவதிலும் புறப்படுவதிலும் காலதாமதம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close