Published : 13,Jan 2020 09:53 AM
அதிருப்தியை வெளிப்படுத்திய காங்கிரஸ்.. கூட்டத்தை புறக்கணித்த திமுக

சிஏஏவுக்கு எதிராக டெல்லியில் சோனியா காந்தி தலைமையில் நடைபெறும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில், திமுக சார்பில் யாரும் பங்கேற்கவில்லை.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தை ஏற்கெனவே திரிணாமூல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்திருந்தன.
இந்நிலையில் இக்கூட்டத்தில் திமுக சார்பில் யாரும் பங்கேற்கவில்லை. ஏற்கெனவே ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக காங்கிரஸ் இடையே சலசலப்பு ஏற்பட்டது. இந்நிலையில் காங்கிரஸ் சார்பில் நடைபெறும் கூட்டத்தில் திமுக சார்பில் யாரும் பங்கேற்கவில்லை. தேசியவாத காங்கிரஸ் சார்பில் சரத்பவார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் திருமாவளவன் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.