சாலை விபத்தில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் மகன் உயிரிழப்பு

சாலை விபத்தில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் மகன் உயிரிழப்பு
சாலை விபத்தில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் மகன் உயிரிழப்பு

சென்னை மாதவரத்தில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் மகன் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புதுவண்ணாரப்பேட்டை காவலர் குடியிருப்பில் வசிப்பவர் சங்கர். இவர் ராயபுரம் போக்குவரத்து காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் நிதிஷ்குமார் (21). அம்பத்தூரில் உள்ள தனியார் ஐடி கம்பெனியில் அதிகாரியாக வேலைப்பார்த்து வந்தார். இந்நிலையில், நேற்று நள்ளிரவு பணி முடிந்து நிதீஷ்குமார் மற்றும் அவரது சக அலுவலர்கள் யாசர் அராஃபத்(21), சிவா (21) ஆகியோர் இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது மாதவரம் கணக சத்திரம் அருகே வரும் போது அங்கு வந்த டிப்பர் லாரி ஒன்று திடீரென நிதிஷ்குமார் வந்து கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி 3 பேரும் கீழே விழுந்தனர்.

இதை கண்ட அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டேன்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் நிதிஷ்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com