[X] Close

ராணுவ வீரர் மணிவண்ணன் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி

20-lakh-fund-released-for-mannivan-family

காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த மணிவண்ணன் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ. 20 லட்சம் ரூபாய் நிவாரண நிதி அறிவித்துள்ளார்.


Advertisement

இது குறித்து அறிக்கை ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். மணிவண்ணன் இறந்த செய்தி கேட்டு மிகுந்த துயரமும் மன வேதனையும் அடைந்ததாக முதலமைச்சர் தன் அறிக்கையில் கூறியுள்ளார். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவிப்பதாகவும் முதல்வர் கூறியுள்ளார். காஷ்மீரில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் தீபக் மைதி், மணிவண்ணன் ஆகிய இருவர் உயிரிழந்தனர். இவர்களில் மணிவண்ணன் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close