Published : 12,Jan 2020 11:43 AM
அரசு விடுதியில் தங்கிப் படித்த பள்ளி மாணவி தற்கொலை - தென்காசியில் சோகம்

சங்கரன்கோவில் அருகே அரசு மாணவியர் விடுதியில் தங்கிப் படித்து வந்த பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள வடக்கு அழகுநாச்சியாபுரத்தைச் சேர்ந்த கனகராஜ் என்பவரின் மகள் தங்கப்பிரியா (17). இவர் குருவிகுளம் அரசு மாணவியர் விடுதியில் தங்கி, அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்தார். இந்நிலையில் நேற்று திடீரென்று விடுதி அறையில் அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டார்.
தகவலறிந்து விடுதிக்கு சென்ற குருவிகுளம் போலீஸார், மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும், மாணவி ஏன் தற்கொலை செய்துகொண்டார் ? என்பது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - +91 44 2464 0050, +91 44 2464 0060)