[X] Close

அஸ்வின் இல்லாமல் களமிறங்கிய இந்திய அணி

Ashwin-left-out-for-India-s-Trophy-opener

சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் ஆடும் லெவனில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு இடம் கிடைக்கவில்லை.

எட்ஜ்பாஸ்டனில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமது பீல்டிங்கைத் தேர்வு செய்தார். ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் என்பதால், புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ் மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா ஆகிய 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்குகிறது. சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. பேட்டிங்க் வரிசையைப் பொறுத்தவரையில், ரோகித் ஷர்மா, ஷிகர் தவான், விராத்கோலி, யுவராஜ் சிங், தோனி, கேதர் ஜாதவ் மற்றும் ஆல்ரவுண்டர்கள் ஹர்திக் பாண்ட்யா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் உள்ளனர். அஜிங்கியா ரஹானேவுக்கும் ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை. 


Advertisement

Advertisement
[X] Close