இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 82 ஆயிரம் மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொண்டிருப்பது தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது.
2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் வரையிலான பத்து ஆண்டுகளில் நாடு முழுவதிலும் 81 ஆயிரத்து 758 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொண்டிருப்பது தெரியவந்துள்ளது. 57 சதவிகித தற்கொலைகள் 2018ஆம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளில் நிகழ்ந்துள்ளது. இதில், 10 ஆயிரத்து 159 மாணவ, மாணவிகள் தேர்வுகளில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
2018 ஆம் ஆண்டில் இந்தியா முழுவதிலும் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் தற்கொலை செய்துகொண்டிருப்பதாகவும் அதில் 8 சதவிகிதத்தினர் மாணாக்கர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மன அழுத்தம், மதுப்பழக்கத்திற்கு அடிமையாவது போன்றவையே காரணம் என உளவியலாளர்கள் கூறுகின்றனர்.
2018 ஆம் ஆண்டில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆயிரத்து 448 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொண்டிருக்கின்றனர். அடுத்ததாக தமிழ்நாட்டில் 953 மாணாக்கரும், மத்தியப் பிரதேசத்தில் 862 மாணாக்கரும், கர்நாடகாவில் 755 மாணாக்கரும், மேற்கு வங்கத்தில் 609 மாணாக்கரும் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர்.
Loading More post
சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த ரவுடி சில மணி நேரத்திலேயே வெட்டிப்படுகொலை
டீ விலை ₹20; சர்வீஸ் சார்ஜ் ₹50; நல்லா இருக்கு இந்த பார்ட்னர்ஷிப்: IRCTC-ஐ சாடிய மக்கள்!
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: யார் கேப்டன்?
பக்ரைனில் இறந்த தொழிலாளி...நல்லடக்கம் செய்ய கைகோர்த்த ரஜினி ரசிகர் மன்றத்தினர்
மீண்டும் மிரட்டும் கொரோனா - பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம்
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்