[X] Close

தமிழக அரசை மத்திய அரசுதான் கட்டுப்படுத்துகிறது: ராகுல்காந்தி பேட்டி

Rahul-Gandhi-alleged-central-government

தமிழக அரசை, மத்திய பாஜக அரசு கட்டுப்படுத்துகிறது என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்தார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி, ஒரே சித்தாந்தத்தை பரப்ப நினைக்கும் பாஜக, ஆர்எஸ்எஸ்-க்கு எதிராக போராட வேண்டும் என வலியுறுத்தினார். இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனி கலாசாரம் உள்ளது. அதனை மதிக்க வேண்டும் என்றும் ராகுல்காந்தி தெரிவித்தார்.

தி.மு.க தலைவர் கருணாநியின் 94-வது பிறந்தநாள் விழா மற்றும் அவரின் சட்டப்பேரவை வைரவிழா நேற்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்கு இந்திய அளவில் முக்கியமான அரசியல் தலைவர்கள் பலரும் பங்கேற்றனர். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் பங்கேற்றிருந்தார். இந்நிலையில் இன்று காலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார். பின்னர் சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close