Published : 10,Jan 2020 03:41 PM

இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து ஆறாவதாக களமிறங்கிய விராட் கோலி

Virat-Kohli---batted-at-6-in-3rd-T20I-against-srilanka

இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் கேப்டன் விராட் கோலி ஆறாவது இடத்தில் களமிறங்கினார்.

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி புனே நகரில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனையடுத்து, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல், ஷிகர் தவான் களமிறங்கினர். இருவரும் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தனர். தவான் 52(36), கே.எல்.ராகுல் 54 (36) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

image

இதனையடுத்து, மூன்றாவதாக களமிறங்க வேண்டிய விராட் கோலிக்கு பதிலாக சஞ்சு சாம்சன் இறங்கினார். முதல் பந்திலே சிக்ஸர் விளாசிய அவர், அடுத்த பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து வந்த ஸ்ரேயாஷ் ஐயரும் முதல் பந்தில் பவுண்டரி விளாசி அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து, 6வது விக்கெட்டாக விராட் கோலி களமிறங்கினார். அதிரடியாக விளையாடிய அவர் 17 பந்துகளில் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 26 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். பின்னர் வந்த வாஷிங்டன் சுந்தரும் முதல் பந்திலே டக் அவுட் ஆனார். இறுதியில், மணிஷ் பாண்டே 18 பந்துகளில் 31 ரன்களும், ஷர்குல் தாக்கூர் 8 பந்துகளில் 22 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் குவித்தது.

image

வழக்கமாக மூன்றாவது இடத்தில் களமிறங்கும் விராட் கோலி இந்தப் போட்டியில் தனக்கு முன்பாக சாம்சன், மணிஷ் பாண்டே மற்றும் ஸ்ரேயாஸ் ஆகியோரை களமிறங்க வைத்தார். அதாவது, அரிதாக அவர் ஆறாவது வீரராக களமிறங்கினார். இரண்டாவது டி20 போட்டியின் போது விராட் கோலி நான்காவது வீரராகவே களமிறங்கினார். ஸ்ரேயாஸ் ஐயரை மூன்றாவது வீரராக களமிறக்கினார்.

image

இதனிடையே, கேப்டனாக சர்வதேச கிரிக்கெட்டில் 11 ஆயிரம் ரன்கள் குவித்த கேப்டன் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். விராட் கோலி 196 இன்னிங்சில் மட்டுமே விளையாடி இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 252, தென்னாப்ரிக்கா முன்னாள் கேப்டன் ஸ்மித் 264 இன்னிங்ஸ்களிலும் 11 ஆயிரம் ரன்கள் எடுத்திருந்தனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்