[X] Close

40 ஆடுகளின் கறி பறிமுதல்: அதிகாரிகள் திடீர் நடவடிக்கை

Meat-of-Goats-seized-in-chennai

சென்னை திருவல்லிக்கேணியில் வீட்டில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட ஆட்டுக்கறி மற்றும் ஆடுகளை, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கடந்த 3 மாதகாலமாக திருவல்லிக்கேணி யானை குளம் தெருவில் வீட்டில் சட்டவிரோதமாக ஆடுகள் வெட்டப்படுவதாகவும் இதனால் அருகில் வசிப்பவர்களுக்கு சுகாதார பிரச்சனை ஏற்படுவதாகவும் உணவு பாதுகாப்பு துறையிடம் பொதுமக்கள் பலமுறை புகார் அளித்துள்ளனர்.

இதனையடுத்து நேற்று இரவு முதல், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இதில் திருவல்லிக்கேணி யானை குளம் தெருவில் உள்ள பிலால் உசேன் என்பவர் தனது வீட்டில் சட்டவிரோதமாக 40க்கும் மேற்பட்ட ஆடுகளை வெட்டியது தெரிய வந்தது. காவல் துறை உதவியுடன் வந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், வெட்டப்பட்ட 40 ஆட்டுக்கறியையும்,10 ஆடுகளையும் பறிமுதல் செய்தனர்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close