
இந்திய சந்தைகளில் வரவேற்பு பெற்றுள்ள பானசோனிக் நிறுவனம் எலுகா ஐ3 மெகா எனும் புதிய ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தக் கைப்பேசியானது 5.5 அங்குல அளவு, 1280 x 720 பிக்சல் ரெசொல்யூஷன் உடைய ஹெச்டி தொடுதிரையுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இது குவாட் கோர் பிராசசர் இயங்குதளத்தில் செயல்படக்கூடியது. 3ஜிபி ரெம், 16ஜிபி உள்ளக சேமிப்பு நினைவகம் போன்ற பல சிறப்பம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் கேமரா பிரியர்களை கவருவதற்காக 13 மெகாபிக்சல்களை உடைய பின்புற கேமிரா, 5 மெகா பிக்சல்களை உடைய முன்புற கேமராவுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் கோல்டு மற்றும் சில்வர் நிறங்களில் வெளிவரவுள்ளது. 4000மி. ஆம்பியர் திறன் கொண்ட பேட்டரி பொறுத்தி உருவாக்கப்பட்ட எலுகா ஐ3 மெகா இந்திய மதிப்பில் 11, ஆயிரமாக இருக்கும் என தெரிகிறது.