Published : 04,Jun 2017 05:37 AM

லண்டன் தீவிரவாத தாக்குதல் அதிர்ச்சியளிக்கிறது: பிரதமர் மோடி

London-terror-attack--PM-Narendra-Modi-expresses-shock--condemns-it

லண்டன் தீவிரவாத தாக்குதல் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலில் இதுவரை 6 பேர் இறந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

லண்டன் பிரிட்ஜில் நடந்து சென்றவர்கள் மீது வேனை மோதியும், பரோ மார்க்கெட் பகுதியில் பொதுமக்களை கத்தியால் தாக்கியும் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தீவிரவாத தாக்குதலில் பொதுமக்கள் 6 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய மூன்று பேரை போலீஸ் சுட்டுக் கொன்றது. இந்த கோழைத்தனமான தாக்குதலுக்கு உலக நாட்டு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

லண்டன் தீவிரவாத தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட ட்வீட்டர் செய்தியில், “லண்டனில் நடத்தப்பட்டுள்ள தாக்குதல்கள் அதிர்ச்சி மற்றும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு நாங்கள் கடும் கண்டனம் தெரிவிக்கிறோம். என்னுடைய எண்ணங்கள் அனைத்தும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை பற்றியே உள்ளது, காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்,” என குறிப்பிட்டுள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்