Published : 04,Jun 2017 05:15 AM

காஷ்மீர் தாக்குதலில் தமிழக வீரர் உயிரிழப்பு

Terrorist-attack-in-Kashmir--Jawan-dead-from-TN

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த இரு ராணுவ வீரர்களில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்த மணிவண்ணன் என தெரியவந்துள்ளது. இவர் திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த கேளூர் ஊராட்சிக்கு உட்பட்ட தேப்பனந்தல் கிராமத்தை சேர்ந்தவர்.

ஸ்ரீநகரில் மணிவண்ணன் ராணுவ வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, காசிகுந்த் பகுதியில் திடீரென தீவிரவாதிகள் ஏகே 47 ரக துப்பாக்கியால் ராணுவ வாகனத்தை நோக்கிச் சுட்டனர். அதில் மணிவண்ணன் உடலில் குண்டு பாய்ந்ததில் அவர் உயிரிழந்தார். மேற்கு வங்க மாநிலத்தின் மிட்னாபூரைச் சேர்ந்த வீரர் தீபக் மெய்ட்டியும் தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார். காயமடைந்த மேலும் 4 வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்